ஐ.பி.எல் T20 ஆட்ட நிர்ணய சர்ச்சை: விசாரணை அறிக்கை தாக்கல்

ஐ.பி.எல் T20 ஆட்ட நிர்ணய சர்ச்சை: விசாரணை அறிக்கை தாக்கல்

ஐ.பி.எல் T20 ஆட்ட நிர்ணய சர்ச்சை: விசாரணை அறிக்கை தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

04 Nov, 2014 | 4:05 pm

ஐ.பி.எல் T20 தொடரில் எழுந்த ஆட்ட நிர்ணய சர்ச்சை குறித்த விசாரணை அறிக்கையை, நீதிபதி முகுல் முத்கல் தலைமையிலான குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

 கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின்போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக முன்னணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சாண்டிலா ஆகியோர் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, கிரிக்கெட் சபை அவர்களுக்குத் தடை விதித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் கௌரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா உட்பட பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது.
இந்த சர்ச்சை குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
இந்தக் குழு கடந்த பெப்ரவரியில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
அதில் குருநாத் மெய்யப்பன் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்ததுடன், மேலும் 13 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரிவித்து அதற்கான பட்டியலை சீலிட்ட உறையில் வைத்து சமர்ப்பித்தது.
இதையடுத்து, கிரிக்கெட் வாரிய தலைவர் சீனிவாசன் பதவியில் இருந்து ஒதுங்கினார். இந்நிலையில், முத்கல் கமிட்டி தனது இறுதி அறிக்கையை சீலிட்ட உறைகளில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதன் மீதான விசாரணை எதிர்வரும் 10 ஆம் திகதி  நடைபெறவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்