ஐ.நாவின் எழுத்துமூல சாட்சி விசாரணை நாட்டிற்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் – பிரதீபா மஹானாமஹேவா

ஐ.நாவின் எழுத்துமூல சாட்சி விசாரணை நாட்டிற்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் – பிரதீபா மஹானாமஹேவா

ஐ.நாவின் எழுத்துமூல சாட்சி விசாரணை நாட்டிற்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் – பிரதீபா மஹானாமஹேவா

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2014 | 10:09 am

இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐ.நா விசாரணைக் குழு, எழுத்துமூல சாட்சி விசாரணைகளை நிறைவுசெய்துள்ளது.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய அழுத்தங்கள் தொடர்பில், சட்டத்தரணி கலாநிதி பிரதீப மஹானாமஹேவாவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

இந்த விசாரணைகளில் முக்கியத்துவம் வாய்ந்த, பொதுமக்களின் சாட்சியங்களை பெற்றுக்கொள்ள பல்வேறு அமைப்புக்கள் உதவி புரிந்துள்ளதால், இந்த விடயத்தில் அதிகளவிலான அழுத்தங்கள் நாட்டிற்கு ஏற்படக்கூடுமென அவர் கூறினார்.

எழுத்துமூல மற்றும் வாய்மூல சாட்சியங்கள் தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ளதால் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, பெப்ரவரி மாத இறுதியில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என சட்டத்தரணி பிரதீப மஹானாமஹேவா சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் பேரவை இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான பொறுப்பை ஐ.நா பாதுகாப்பு பேரவைக்கு வழங்கும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு பேரவையில் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக, விஷேட அதிகாரத்தை பயன்படுத்தலாம் எனவும் பிரதீபா மஹானாமஹேவா மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்