வெள்ளவத்தை மெரைன் ட்ரைவ் வீதியில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

வெள்ளவத்தை மெரைன் ட்ரைவ் வீதியில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

வெள்ளவத்தை மெரைன் ட்ரைவ் வீதியில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 8:28 am

கொழும்பு மரைன் ட்ரைவ் வீதியில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த விதியில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய போக்குவரத்துத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய அலுவலக நாட்களில் காலை ஏழு மணி தொடக்கம் ஒன்பது மணி வரை மரைன் ட்ரைவ் வீதியின் வெள்ளவத்தை இராமகிருஸ்ணா சந்தியில் இருந்து கின்ரோஸ் பிளேஸ் சந்தி வரை கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்களை மாத்திரமே செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 4.30 தொடக்கம் மாலை 6.30 வரை பம்பலப்பிட்டி கின்ரோஸ் பிளேஸ் சந்தியில் இருந்து வெள்ளவத்தை இராமகிருஸ்ணா சந்திவரை தெஹிவளை பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மாத்திரமே செலுத்தப்பட வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழம மற்றும் அரச விடுமுறை நாட்களில் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்