வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது, பாராளுமன்றத்தில் கடும் வாத, பிரதிவாதம்

வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது, பாராளுமன்றத்தில் கடும் வாத, பிரதிவாதம்

வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது, பாராளுமன்றத்தில் கடும் வாத, பிரதிவாதம்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 7:38 pm

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், இலஞ்ச ஊழல் ஆ​ணைக்குழு உள்ளிட்ட மேலும் 22  நிறுவனங்களுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது சபையில் இன்று கடும் வாதப், பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

இன்றைய விவாதத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க, பல்வேறு அரச நிறுவனங்களின் முறைகேடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன்போது ஆளும் கட்சியினர் தொடர்ச்சியாக அவரின் உரைக்கு இடையூறு விளைவித்ததால் பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் ஆக்ராசனத்தில் இருந்த குழுக்களின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார் சபை நடவடிக்கைகளை சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்தார்.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் டி.எம்.ஜயரத்ன, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நாட்டுக்கு தேவை என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா சபையில் உரையாற்றியபோது, அடுத்த தேர்தலுக்கு முன்னர் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்

சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் இன்றைய குழுநிலை  விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக நியமிக்கப்படுகின்றவர்கள் சுயாதீனமாக தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் இன்று வலியுறுத்தியுள்ளது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சபையில் இன்று உரையாற்றியபோது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்கள் விடுதலை முண்ணனி அனைத்து சந்தர்ப்பங்களிலும் சமூகத்தில் பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்