வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 8:05 am

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இன்று முற்பகல் 9.30 க்கு பாராளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

பல்வேறு அமைச்சுக்கள் தொடர்பில் இன்று முதல் சனிக்கிழமை உள்ளடங்களாக ஆறு நாட்கள் குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் தினமும் முற்பகல் 9.30 தொடக்கம் மாலை 6.30 வரை இடம்பெறவுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்