முறைகேடுகளை மறைக்க, வெளிவிவகார அமைச்சர் முயற்சிப்பதாக வசந்த சமரசிங்க குற்றச்சாட்டு

முறைகேடுகளை மறைக்க, வெளிவிவகார அமைச்சர் முயற்சிப்பதாக வசந்த சமரசிங்க குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 9:53 pm

ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை புனரமைப்பு செய்யும் நடவடிக்கையில் ஏற்பட்ட முறைகேடுகளை மறைப்பதற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் முயற்சிப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியின் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க குற்றஞ்சுமத்துகின்றார்.

இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் அண்மையில் தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டும் வசந்த சமரசிங்க, இது குறித்து உரிய விசாரணைகள் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை புனரமைப்பது தொடர்பான நடவடிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக வசந்த சமரசிங்க மற்றும்
ஜெனீவாவிற்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதி தமாரா குணநாயகம் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

நிரந்தர வதிவிட பிரதிநிதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் புனரமைப்பு நடவடிக்கை தொடர்பான கணக்காய்வு அறிக்கையை சுட்டிக்காட்டியே இவர்கள் இந்த குற்றச்சாட்டடை முன்வைத்திருந்தனர்.

இந்த கணக்காய்வு அறிக்கையின் படி, இதுகுறித்த ஒப்பந்தம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புவைத்திருந்த பி.டி.துரைராஜா என்பவரின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகவும், அவர்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும், பி.டி.துரைராஜாவிற்கும் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அதற்கு பதில் வழங்கியிருந்தார்.

இது தொடர்பில், சுவிஸ்ஸர்லாந்தின் பெடரல் பொலிஸின் Pபியர் ஈவ்ஸ் ஹூகனன், ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதியின் அலுவலகத்தின் அதிகாரியான யு.ஜவ்காரிடம் வினவியதாகவும், கடிதம் ஒன்றின் மூலம் அதனை உறுதிப்படுத்தியதாகவும் அமைச்சர் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும்,  நிதி அமைச்சின் சிரேஷ்ட நான்கு அதிகாரிகள் தயாரித்த கணக்காய்வு அறிக்கை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கௌ்ளப்பட வேண்டும் என குற்றச்சாட்டை முன்வைக்கும் தரப்பினர் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த பின்புலத்திலேயே, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடந்த 30 ஆம் திகதி பாராளுமன்றத்தில் மீண்டும் இது குறித்து கருத்து தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்