மினுவங்கொடை மற்றும் நிட்டம்புவ வாகன விபத்துக்களில் இருவர் பலி, 40 க்கும் அதிகமானோர் காயம்

மினுவங்கொடை மற்றும் நிட்டம்புவ வாகன விபத்துக்களில் இருவர் பலி, 40 க்கும் அதிகமானோர் காயம்

மினுவங்கொடை மற்றும் நிட்டம்புவ வாகன விபத்துக்களில் இருவர் பலி, 40 க்கும் அதிகமானோர் காயம்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 8:52 am

மினுவங்கொடை மெடேமுல்ல மற்றும் நிட்டம்புவ தங்ஓவிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 40 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

மினுவங்கொடை, மெடேமுல்ல பிரதேசத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் காரொன்று வீதியை விட்டு விலகி மின்கம்பமொன்றுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

கவலைக்கிடமான நிலையிலுள்ள ஒருவர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, நிட்டம்புவ, தங்ஓவிட்ட, கம்புருகல்ல பகுதியில் இன்று காலை 6.55 மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தை அடுத்து  தனியார் பஸ்சும்  காரொன்றும் குறித்த பஸ்களில் மோதியுள்ளன.

விபத்தில் காயமடைந்த 40க்கும்  மேற்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

இவர்கள் வறக்காபொல மற்றும் வத்துபிட்டிவல வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்