பாகிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்கள் கொள்ளைச் சம்பவங்களுடன்  தொடர்பு

பாகிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்கள் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு

பாகிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்கள் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 1:41 pm

நீர்கொழும்பில் தங்கியுள்ள பாகிஸ்தான் புகலிடக்கோரிக்கையாளர்கள் கொள்ளைச் சம்பவங்களுடன்  தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

பாகிஸ்தான் புகலிடக்கோரிக்கையாளர்கள் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று, பணத்தை கொள்ளையிடுகின்றமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறுகின்றார்.

இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட சிலர் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்படுகின்றார்.

வர்த்தக நிலையமொன்றில் 40 ஆயிரம் ரூபாவை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தர்ப்பத்தில் உடுதும்பர பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில்  இரண்டு ஆண்கள், இருண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறான கொள்ளைகளை இவர்கள் முன்னெடுத்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  குறிப்பிடுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்