திருமலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்; மூவர் காயம்

திருமலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்; மூவர் காயம்

திருமலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்; மூவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 11:56 am

திருகோணமலை லிங்கநகர் பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவர்களில் இருவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மரண வீடொன்றில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் அட்டாளைச்சேனை ஆலங்குளம் பகுதியில் உளநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்