ஜி.கே வாசன் தனிக்கட்சி அமைப்பதால் தமக்கு பாதிப்பில்லை என தமிழக காங்கிரஸ் தெரிவிப்பு

ஜி.கே வாசன் தனிக்கட்சி அமைப்பதால் தமக்கு பாதிப்பில்லை என தமிழக காங்கிரஸ் தெரிவிப்பு

ஜி.கே வாசன் தனிக்கட்சி அமைப்பதால் தமக்கு பாதிப்பில்லை என தமிழக காங்கிரஸ் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 8:19 pm

தாம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, புதிய கட்சி தொடங்கியுள்ளதாக இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே வாசன் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புதிய இயக்கத்தின் பெயரும், கொடியும் திருச்சி மாநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என ஜி.கே வாசன் கூறியுள்ளார்

மாநில தலைமையை கட்சி மேலிடம் புறக்கணிப்பதாக தெரிவித்து, கடந்த 30-ம் திகதி தலைவர் பதவியை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஞானதேசிகன் ராஜினாமா செய்திருந்தார்.

இதையடுத்தே, புதிய கட்சி தொடங்குவதற்கு ஜி.கே.வாசன் முடிவு செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் கடந்த 3 நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்த வாசன், புதிய கட்சி தொடங்கும் தனது முடிவை இன்று அறிவித்தார்.
இதேவேளை, ஜி.கே.வாசன் கட்சியில் இருந்து வெளியேறுவதால்,  காங்கிரஸ் ஒருபோதும் பாதிக்கப்படாதென தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் குடும்பத்தை விட்டு ஜி.கே.வாசன் வெளியேறும் முடிவு தவறானது எனவும், அந்த முடிவில் அவர் உறுதியாக இருந்தால், வாழ்த்துவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவரையும் வெளியேற வேண்டாம் எனவும், அவ்வாறு வெளியேறுவதால் காங்கிரஸ் வருத்தப்படுமே தவிர, வீழ்ச்சியடைந்து விடாதென எஸ். இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்