சீரற்ற வானிலையால் 1,800 மக்கள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் 1,800 மக்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 7:06 pm

கடும் மழையுடன் கூடிய வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த 1,800 பேர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

570 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

கொஸ்லாந்தை – மீரியபெத்த, பண்டாரவளை, பூணாகலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்