கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு; மேலும் இரு சடலங்கள் மீட்பு

கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு; மேலும் இரு சடலங்கள் மீட்பு

கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு; மேலும் இரு சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 1:21 pm

கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி காணாமற்போயிருந்த மேலும் இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

இதற்கமைய மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.

இன்றைய அகழ்வுப் பணிகளின்போது சிறு பிள்ளையொன்றின் சடலமும், ஆண் ஒருவரது சடலமும் மீட்கப்பட்டதாக மத்திய பாதுகாப்டபு படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் இடம்பெயர்ந்த இரண்டாயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளனர்.

அத்துடன் சீரற்ற வானிலையால் இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது

இதேவேளை, 100 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி மண்சரிவு ஏற்படுவதற்கான காரணமாக அமையலாம் என  சிரேஷ்ட புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்

இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்

அத்துடன் சிங்கள மொழியைப் போன்றே தமிழ் மொழியிலும் மண்சரிவு அபாயம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்