எல்.ரீ.ரீ.ஈ மீதான தடை நீக்கம் குறித்து சுஜீவ சேனசிங்க கருத்து

எல்.ரீ.ரீ.ஈ மீதான தடை நீக்கம் குறித்து சுஜீவ சேனசிங்க கருத்து

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 9:08 pm

ஐரோப்பிய நீதிமன்றத்தின் எல்.ரீ.ரீ.ஈ மீதான தடை நீக்கம் குறித்து கடுவெல பகுதியில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க கருத்து தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்த கருத்து:-

[quote]கே.பி கைது செய்யப்பட்டார். ஆனால், கடந்த ஓரிரு வருடங்களுக்குள் விடுதலை புலிகள் இயக்கத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் விற்ற பணம் வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. அவை விற்கப்பட்டால்,
வருமானமாக வரவு செலவுத்தட்டத்திட்டற்குள் உள்ளடக்கப்பட வேண்டும். கே.பி வசமிருந்த இருபது கப்பல்களுக்கு என்ன நடந்தது? ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கையில் இலங்கை சார்பில் ஒரு சட்டத்தரணியை அனுப்ப முடியாமல் போனது.[/quote]

[quote]விடுதலை புலிகளின் ஆதரவு குழு அந்த இயக்கம் மீதான தடையை நீக்குமாறு வழக்கு தாக்கல் செய்திருந்தது. ஏதேனும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பின் அது தமக்கு தாக்கம் செலுத்துவதாயின் ஒரு தரப்பாக செல்லக் கூடிய சந்தரப்பம் காணப்படுகின்றது. எனினும் இந்த வழக்கிற்கு வடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடைடைய நீக்க வேண்டாம் எனக் கூறி இலங்கை அரசாங்கம் அந்த வழக்கிற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் இலங்கை ஒரு சட்டதரணியைக் கூட அந்த வழக்கிற்கு அனுப்பி வைக்காதது ஏன்? இந்த வழக்கை தாக்கல் செய்யுமாறு, கே.பி யை அரசாங்கம் கோரியது.இத்தாலியிலுள்ள விடுதலை புலிகள் செயற்பாட்டாளர்களுடன் நாட்டிற்குள் வந்து முதலமைச்சர் ஒருவரை சந்தித்துள்ளார்.வழக்கு தாக்கல் செய்து அந்த வழக்கில் எவ்வாறாவது வெற்றி பெறுங்கள், அவ்வாறு வெற்றிபெற்று விடுதலை புலிகள் மீதான தடை நீக்கப்பட்தன் பின்னர் அனைத்து சொத்துக்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். தற்போது யார் துரோகிகள் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்