உள்ளூர் பொருளாதரத்தின் மூலமே, நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் – ஜனாதிபதி

உள்ளூர் பொருளாதரத்தின் மூலமே, நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 6:51 pm

உள்ளூர் பொருளாதரத்தின் மூலமே, நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்,

வெளிநாடுகள், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பன வழங்கும் அனைத்து ஆலோசனைகளையும் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

அந்த ஆலோசனைகளை ஆராய்ந்து, நாட்டுக்கே உரித்தான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளது.

கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் புதிய கட்டடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதனைக் கூறியுள்ளார்.

வர்த்தகர்கள் முதலீடு செய்வதற்கான சிறந்த நாடாக இலங்கை விளங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

10 வருடங்களாக பொருளாதாரம் உரிய முகாமைத்துவதற்கு உட்படுத்தப்பட்டதால் கிடைத்த அனுகூலங்களை, இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு வழங்க முடிந்ததாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்