இருபது வருட கனவை நிறைவேற்றிய பாகிஸ்தான்

இருபது வருட கனவை நிறைவேற்றிய பாகிஸ்தான்

இருபது வருட கனவை நிறைவேற்றிய பாகிஸ்தான்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 4:10 pm

அவுஸ்ரேலிய அணிக்கெதிராக பாகிஸ்தான் அணி வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றுக்கொண்டது.  இன்று இடம்பெற்ற இறுதி நாள் ஆட்டத்தின் போது 356 ஓட்டங்களால் இந்த வரலாற்று வெற்றியை பதிவு செய்து கொண்டது.

197043

5ஆம் நாளான இன்று 460 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி மேலதிகமாக 103 ஓட்டங்களை பெற முன்னர் தனது சகல விக்கெட்டுக்களையும் இழந்து மொத்தமாக 246 ஆட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அணி சார்பில் ஸ்டீபன் ஸ்மித் மாத்திரமே சிறப்பாக செயற்பட்டு 97 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

197041
முன்னதாக அவுஸ்ரேலிய அணி மொத்தமாக இரு இனிங்ஸிலும் சேர்த்து 863 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் சிறந்த வீரராக மிஸ்பா-உல்-ஹக் உம் போட்டித் தொடரின் நாயகனாக யூனிஸ் கானும் தேர்வு செய்யப்பட்டனர்

197037

​இதேவேளை, இருபது வருடங்களின் பின்னர் ஆவுஸ்ரேலிய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தொடர் ஒன்றை வெற்றிப்பெற்றுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்