இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்பு இன்று முதல் மக்கள் பார்வைக்கு

இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்பு இன்று முதல் மக்கள் பார்வைக்கு

இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்பு இன்று முதல் மக்கள் பார்வைக்கு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 7:57 am

தேர்தல்கள் ஆணையாளரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்பு இன்று முதல் காட்சிபடுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, இந்த வாக்காளர் இடாப்பை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் பார்வையிட முடியும்  என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலிலும் வாக்களிப்பதற்கான தகைமை 2014 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு மாத்திரமே உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்