இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 50 பேர் பலி

இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 50 பேர் பலி

இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 50 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2014 | 9:10 am

பாகிஸ்தான் – இந்திய எல்லைப் பகுதியில் இடம்பெற்ற  குண்டுத் தாக்குதலில் 50 க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதுடன் 100 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய எல்லைக் கடப்பு பகுதியான வஹாவிற்கு அருகிலுள்ள சோதனைச்சாவடியில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் இயக்கம் உரிமை கோரியுள்ளதுடன் இந்த தாக்குலை தாமே மேற்கொண்டதாக மற்றுமொரு ஆயுதக் குழுவொன்றும் அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் எல்லைப் பாதுகாப்பு உறுப்பினர்களும் அடங்கியுள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

வஹா எல்லைப் பகுதியில் தேசிய கொடிகளை இறக்கும் நிகழ்வினை பார்வையிட பலர் ஒன்று கூடுவதாக சர்வதேச தகவல்கள் குறிப்படுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்