ஹட்டன் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட யோகட்களில் பங்கசு தொற்று

ஹட்டன் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட யோகட்களில் பங்கசு தொற்று

By Staff Writer

Nov 21, 2014 | 12:07 pm

ஹட்டன் போடைஸ் பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட யோகட்களில் பங்கசு தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதார பணிமனைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று காலை பாடசாலைக்கு விரைந்த போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட யோகட்களில் பங்கசு தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டதாக புளியாவத்தை பிராந்திய பொது சுகாதார பரிசோதகர் தர்மலிங்கம் வரதராஜன் தெரிவிக்கன்றார்.

இதன் காரணமாக மாணவர்களுக்கு யோகட் வழங்கப்படுவது இன்று தற்காலிகமாக தடை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட யோகட்களில் பங்கசு தொற்றியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் புளியாவத்தை பிராந்திய பொது சுகாதார பரிசோதகர் கூறினார்.

யோகட்டுக்களை பாடசாலைக்கு விநியோகதத்ததில் தவறு ஏற்பட்டுள்ளதா அல்லது களஞ்சியப்படுத்தலில் சிக்கள் காணப்படுகின்றதா எனபது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் புளியாவத்தை பிராந்திய பொது சுகாதார பரிசோதகர் தர்மலிங்கம் வரதராஜன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மஸ்கெலியா நகரில் வர்த்தக நிலையங்களில் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 18 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.