பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி; தேங்காய் தோட்ட முகாமையாளர் கொலை

பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி; தேங்காய் தோட்ட முகாமையாளர் கொலை

பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி; தேங்காய் தோட்ட முகாமையாளர் கொலை

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2014 | 8:42 pm

முந்தல், மங்களவெளி – அம்பளவெளிப் பகுதியில் ஒருவர் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேங்காய் தோட்டமொன்றின் முகாமையாளர் ஒருவரே கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தோட்டத்தில் பணியாற்றிய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தபோது, ஏற்பட்ட மோதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நாளை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.