இலங்கை அணியின் தோல்விக்கு பொறுப்பேற்பதாக சனத் பாராளுமன்றில் தெரிவிப்பு

இலங்கை அணியின் தோல்விக்கு பொறுப்பேற்பதாக சனத் பாராளுமன்றில் தெரிவிப்பு

இலங்கை அணியின் தோல்விக்கு பொறுப்பேற்பதாக சனத் பாராளுமன்றில் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2014 | 7:00 pm

இந்திய கிரிக்கெட் விஜயத்தில் இலங்கை அணி அடைந்த தோல்வி தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் வாத, பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

விளையாட்டுத்துறை அமைச்சுக்கான வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தின் போது, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது..

இதன்போது, இலங்கை அணியின் தோல்விக்கு, கிரிக்கெட் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய, இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளின் தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

இந்திய கிரிக்கெட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இலங்கை இருப்பதாக விவாதத்தில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

ஆட்ட நிர்ணய சட்டமூலம் ஒன்றை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.