இந்திய பிரஜை ஒருவர் இபோலா தொற்றுக்குள்ளானமை உறுதி

இந்திய பிரஜை ஒருவர் இபோலா தொற்றுக்குள்ளானமை உறுதி

இந்திய பிரஜை ஒருவர் இபோலா தொற்றுக்குள்ளானமை உறுதி

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2014 | 3:44 pm

லைபீரியாவிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய பிரஜை இபோலா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி டில்லி வந்துள்ள குறித்த 26 வயது இளைஞன் மருத்துவ பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் விதிமுறைகளின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனைகளில், வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடத்தப்பட்ட மேலும் சில பரிசோதனைகளில் இபோலா வைரஸின் சில கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு ஏற்கனவே ஆபிரிக்க நாடொன்றில் இபோலாவிற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் சுகாதார நிலைமைகள் குறித்த தரக்கட்டுப்பாடுகள் குறைவாக இருப்பதால் இந்த நோய் பரவுவதால் பாரிய விளைவுகள் ஏற்படும் என ஐ.நா சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.