மீரியபெத்த மண்சரிவு; மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

மீரியபெத்த மண்சரிவு; மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

மீரியபெத்த மண்சரிவு; மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2014 | 6:52 pm

கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் மண்சரிவில் சிக்கி காணாமல்போனோரை தேடி மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இராணுவத் தரப்பின், இடர் முகாமைத்துவ பிரிவுகள் மற்றும் பிரதேச மக்கள் கூட்டாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, கொஸ்லாந்தையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்துவந்த 480 க்கும் அதிகமான குடும்பங்களை சேர்ந்தவர்கள் தற்காலிக தங்குமிட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் ரோஹண கீர்த்தி திசாநாயக்க தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்