மண்சரிவில் புதையுண்டவர்களை  மீட்கும் பணிகள் மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுப்பு

மண்சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுப்பு

மண்சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2014 | 10:05 am

கொஸ்லந்தை மீரயபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்டு காணாமல் போனோரை மீட்பதற்கான பணிகள் மூன்றாவது நாளாக இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சீரற்ற வானிலை காரணமாக ஏனைய பகுதிகளில் உள்ளவர்களும் மிக அவதானத்துடன் செயற்படுமாறும்  அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மண்சரிவில் புதையுண்டவர்களை மீட்பதற்காக மேலும் பல இராணுவ வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரால் மனோ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

புதையுண்டவர்களை மீட்கும் குழுவில் மோப்ப நாய்களும், இராணுவ சிப்பாய்களும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்