மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நாடுகள் அனுதாபம் தெரிவிப்பு

மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நாடுகள் அனுதாபம் தெரிவிப்பு

மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நாடுகள் அனுதாபம் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2014 | 7:50 pm

இலங்கையில் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவிட்ஸர்லாந்து, போலாந்து, கியூபா, பெல்ஜியம் ஆகிய நாடுகளும் அனுதாபங்களை தெரிவித்துள்ளன.

சுவிட்ஸர்லாந்து, போலாந்து, கியூபா, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் தூதுவர்களும், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரும் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளித்தபோது, அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நியமனக்கடிதங்கள் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிடம் இருந்து உதவிகள் தொடர்பான ஏதாவது வேண்டுகோள்கள் விடுக்கப்படுமாயின், அவற்றை உடனடியாக வழங்குவதற்கு அந்த நாடுகள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, நாட்டில் இடம்பெறும் நிவாரண செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி குறித்த பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்