மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வில் சிவசேனா தலைவர் பங்கேற்பு

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வில் சிவசேனா தலைவர் பங்கேற்பு

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வில் சிவசேனா தலைவர் பங்கேற்பு

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2014 | 7:52 pm

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக தேவேந்திரா ஃபெட் நவிஸ் (‍FAD NAVIS)  இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மும்பை வங்கடே மைதானத்தில் இன்று மாலை பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு, ஆசியாவின் பாராளுமன்ற உறுப்பினராக பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஜே ஸ்ரீரங்காவிற்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த பதவியேற்பு நிகழ்வில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தியாவின் 25 மத்திய அமைச்சர்களில், 10 அமைச்சர்கள் மகாராஷ்டிரா முதலமைச்சரின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பதவியேற்பு நிகழ்விற்கு முன்னர், ஃபெட் நவிஸை பாராளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீரங்கா சந்தித்து, கலந்துரையாடினார்.

மும்பையின் தென் பகுதியிலுள்ள வங்கடே மைதானத்தினை சூழ, சுமார் இரண்டாயிரத்து 500 பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக கருதப்படும் ஃபெட் நவிஸ் தலைமையிலான கட்சி மகாராஷ்டிரா சட்ட மன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்றிருந்தது.

44 வயதான ஃபெட் நவிஸ், மகாராஷ்டிராவின் இளைய சட்டமன்ற உறுப்பினராக கருதப்படுவதுடன், மாநிலத்தில் பாரதீய ஜனதாக் கட்சியின் முதலாவது முதலமைச்சராக திகழ்கின்றார்.

இந்தியாவின் 28 முதலமைச்சர்களில் நவிஸ், இளையவராக கருதப்படுகின்றார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் இளைஞர் அணியின் தலைவராகத் திகழ்ந்த நவிஸ், 19 வயதின் முற்பகுதியில் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்திருந்தார்.

தனது 21 ஆவது வயதில் நாக்பூர் மாநகராட்சியின்  ஆட்சியாளராக தெரிவுசெய்யப்பட்ட நவிஸ், 1997 ஆம் ஆண்டு மிகவும் இளம் வயதில் மேயராக தெரிவுசெய்யப்பட்டார்.

1999 ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு முதன்முறையாக நவிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

நான்காவது தடவையாக இம்முறை வெற்றிபெற்றுள்ளார்.

அவர் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பல்வேறு விருதுகளை வெற்றிகொண்டுள்ளார்.

2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில், பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தினால் சிறந்த பாராளுமன்ற உறுப்பினருக்கான விருதினை வெற்றிகொண்டிருந்தார்.

இந்திய அரசியலில் மகாராஷ்டிரா மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக அமைவதுடன், வர்த்தக தலைநகரான மும்பையின் முக்கிய மையமாக கருதப்படுவதுடன், அதிக இலாபத்தினை பெற்றுக்கொள்ளும் மாநிலமாக இது விளங்குகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்