சீரற்ற வானிலை காரணமாக மலையகத்தின் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

சீரற்ற வானிலை காரணமாக மலையகத்தின் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

சீரற்ற வானிலை காரணமாக மலையகத்தின் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2014 | 9:46 am

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக 251 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாறசிறி தெரிவிக்கின்றார்.

இவர்கள் அனைவரும் 7 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.

தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் ஊடாக விடுக்கப்படும் அறிவிதலுக்கு அமைய மண்சரிவு அபாயம் நிலவக் கூடிய பகுதிகளிலுள்ளவர்கள் குறித்த பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாறசிறி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக மலையகத்தின் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

காசல் ரீ, தெதுரு ஓயா ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் களு கங்கை, களனி கங்கை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதா இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்