சிரச – சக்தி நிவாரண யாத்திரைக்கான பணிகள் இன்றும் முன்னெடுப்பு

சிரச – சக்தி நிவாரண யாத்திரைக்கான பணிகள் இன்றும் முன்னெடுப்பு

சிரச – சக்தி நிவாரண யாத்திரைக்கான பணிகள் இன்றும் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2014 | 9:36 am

மண்சரிவு மற்றும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மலையக உறவுகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான சக்தி – சிரச நிவாரண யாத்திரையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கொழும்பு 02, பிரேபுரூக் பிளேஸில் அமைந்துள்ள எம்.ரி.வி/ எம்.பி.சீ. தலைமைக் காரியாலயம், இரத்மலானை ஸ்டைன் கலையக தொகுதி, வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபம் மற்றும் விவேகானந்தா மேட்டில் அமைந்துள்ள விவேகானந்தா சபை மண்டபம் ஆகிய இடங்களில் நிவாரணப் பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நூடில்ஸ், பிஸ்கட், பால்மா வகைகள், சவர்க்காரம், மருத்துவ உதவிப் பொருட்கள், தலையணை, போர்வைகள், குளிர்கால அங்கிகள் மற்றும் புதிய ஆடைகள் ஆகியவற்றை வழங்கி சக்தி – சிரச நிவாரண யாத்திரைக்கு மக்கள் பங்களிப்பு செய்ய முடியும்.

இதுதவிர சக்தி – சிரச நிவாரண யாத்திரையில் ஈடுபடுவதற்காக லொறிகளை பெற்றுக்கொடுப்பதன் ஊடாகவும் பங்களிப்பு வழங்கமுடியும்.

சக்தி – சிரச நிவாரண யாத்திரை தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்காக 0114 896 896 என்ற எமது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்