சப்ரகமுவ  பல்கலைகழக மாணவர்களின் வகுப்புத் தடை நீக்கம்

சப்ரகமுவ பல்கலைகழக மாணவர்களின் வகுப்புத் தடை நீக்கம்

சப்ரகமுவ பல்கலைகழக மாணவர்களின் வகுப்புத் தடை நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2014 | 1:35 pm

சப்ரகமுவ பல்கலைகழகத்தின் நான்கு மாணவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்த தடைநீக்கம் நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பல்கலைக்கழக பதில் துணை வேந்தர் பேராசிரியர் உதய ரத்னாயக்க குறிப்பிட்டார்.

விடுதியில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக அங்கு சென்ற அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மேலும் நான்கு மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதில் துணைவேந்தர் கூறினார்.

இந்த மாணவர்கள் நால்வரும் மேன்முறையீடுகளை சமர்ப்பித்துள்ளதாகவும், அவற்றை மேன்முறையீட்டுக் குழுவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பதில் துணைவேந்தர் உதய ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்