கொஸ்லாந்தை, மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2014 | 3:15 pm

கொஸ்லாந்தை, மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் இன்று முற்பகல் சபை அமர்வுகள் ஆரம்பமாகின.

பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றிய இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, கொஸ்லாந்தை மண்சரிவு மற்றும் அதன்பொருட்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் குறித்து விசேட உரையாற்றினார்

குறிப்பாக ஜனாதிபதி நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்களின் குறைப்பாடுகள் குறித்து ஆராய்ந்ததுடன், தேவையான நிவாரணங்களை முன்னெடுப்பதற்கான பணிப்புரைகளையும் விடுத்திருந்தார்.

இராணுவத்தின் 450 வீரர்களும், விமானப்படையை சேர்ந்த 50 வீரர்களும் தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதுதவிர ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை கூடிய அமைச்சரவை கூட்டத்தின்போது, கொஸ்லாந்தை மண்சரிவில் இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மானித்துக் கொடுப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்