கொஸ்லாந்தை – மீரியபெத்த மண்சரிவு; நாட்டின் பல பகுதிகளில் துக்கம் அனுஷ்டிப்பு

கொஸ்லாந்தை – மீரியபெத்த மண்சரிவு; நாட்டின் பல பகுதிகளில் துக்கம் அனுஷ்டிப்பு

கொஸ்லாந்தை – மீரியபெத்த மண்சரிவு; நாட்டின் பல பகுதிகளில் துக்கம் அனுஷ்டிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2014 | 7:26 pm

கொஸ்லாந்தை – மீரியபெத்த மண்சரிவில் அனர்த்தத்திற்கு உள்ளான குடும்பங்களின் துயரத்தில் பங்குகொள்ளும் நோக்கிலும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் நாட்டின் பல பகுதிகளில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.

மலையக கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு செட்டியார் தெருவில் அனுதாப பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் 3 மணி வரையான காலப் பகுதியில், செட்டியார் தெருவிலுள்ள கடைகள் மூடப்பட்டு கொஸ்லாந்தை – மீரியபெந்த மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

செட்டியார் தெருவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அனுதாப பேரணி, ஐந்துலாம்பு சந்தி வரை பயணித்ததுடன், இந்த பேரணியில் பலர் பங்கேற்றிருந்தனர்.

அங்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, மலையகத்தின் பல பகுதிகளில் இன்றும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டதுடன், கருப்பு மற்றும் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.

கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களுக்காக, தெனியாய ஹெயிஸ் தோட்ட மக்கள் இன்று தொழிலுக்குச் செல்லாமல் துக்கம் அனுஷ்டித்தனர்.

அத்துடன் அவர்களின் ஒரு நாள் ஊதியத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தெனியாய, பெவர்ளி, எனசல்வத்த, அணில்கந்த, செல்வகந்த, ஹென்பட் தோட்ட மக்களும் இன்று துக்கம் அனுஷ்டித்தனர்.

மண்சரிவு அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்காக இன்று மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்