கொஸ்லந்தை மீரியபெத்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய பிரதமர் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பு

கொஸ்லந்தை மீரியபெத்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய பிரதமர் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பு

கொஸ்லந்தை மீரியபெத்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய பிரதமர் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2014 | 1:24 pm

கொஸ்லந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்து அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக பிரமதர் நரேந்திர மோடி தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, மண்சரிவில்  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என தாம் பிராத்திப்பதாகவும் இந்திய பிரதமதர் கூறியுள்ளார்.

மேலும் கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் இடம்பெற்றுள்ள மண்சரிவு தொடர்பில் அமெரிக்க அரசாங்க திணைக்களத்தின் ஊடகவியலாளர் சந்திப்பிலும்  அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் தமது அனுதாபங்களை தெரிவிப்பதாக அமெரிக்க அரசாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜேன் ஷாகி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் நிவாரணம் கோரி உத்தியோகபூர்வ கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய இலங்கைகான அமெரிக்க தூதரகத்தினூடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்