கம்பளை ஜோசப் மகளிர் வித்தியாலயத்தில் மண்சரிவு அபாயம்; மாணவிகள் வெளியேற்றம்

கம்பளை ஜோசப் மகளிர் வித்தியாலயத்தில் மண்சரிவு அபாயம்; மாணவிகள் வெளியேற்றம்

கம்பளை ஜோசப் மகளிர் வித்தியாலயத்தில் மண்சரிவு அபாயம்; மாணவிகள் வெளியேற்றம்

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2014 | 6:10 pm

மண்சரிவு அபாயம் காரணமாக கம்பளை புனித ஜோசப் மகளிர் வித்தியாலயத்தின் இரண்டு வகுப்பறைகளில் இருந்து மாணவிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் அறிவித்தலுக்கு அமைய இன்று முற்பகல் குறிப்பிட்ட பாடசாலையின் இரண்டு வகுப்பறைகளில் இருந்து மாணவிகளை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட உதவிப் பணிப்பாளர் இந்திக ரணவீர குறிப்பிட்டார்.

இதேவேளை, அதிக மழை காரணமாக கண்டி – கால்தென்ன வீதியூடான போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்