உள்ளரங்க சைக்கிள் பந்தயத்தில் மெதியாஸ் பிரென்டல் புதிய உலக சாதனை

உள்ளரங்க சைக்கிள் பந்தயத்தில் மெதியாஸ் பிரென்டல் புதிய உலக சாதனை

உள்ளரங்க சைக்கிள் பந்தயத்தில் மெதியாஸ் பிரென்டல் புதிய உலக சாதனை

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2014 | 12:07 pm

உள்ளரங்க சைக்கிள் பந்தயத்தில் ஒஸ்ரியாவின் மெதியாஸ் பிரென்டல் புதிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.

உலக சைக்கிள் பந்தய அரங்கான சுவிட்ஸர்லாந்தின் ஏகல் அரங்கில் நடைபெற்ற இந்தப் பந்தயம் நடைபெற்றது.

51.85 கிலோ மீற்றர் தூரத்தை ஒரு மணித்தியாலத்தில் கடந்து மெதியாஸ் பிரென்டல் புதிய உலக சாதனையைப் படைத்தார்.

இதற்கு முன்னர் இந்த சாதனை ஜேர்மனியின் யென்ஸ் வொயிட் வசமிருந்தது.

அவர் 51.11 கிலோ மீற்றர் தூரத்தை ஒரு மணித்தியாலயத்தில் கடந்திருந்தார்.

இதற்கமைய 50 செக்கன்களால் மெதியாஸ் பிரென்டல் புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்