இராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2014 | 7:21 pm

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் தமிழக மீனவர்கள் ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஷ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

வீதிகள் மற்றும் ரயில் தண்டவாளத்தை மறித்து மீனவர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது ராமேஸ்வரம் செய்தியாளர் குறிப்பிட்டார்.

மீனவர்களுக்கான மரணதண்டனை விதித்த தகவல் வெளியானவுடன் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது மீனவர்கள் டயர்களை எரித்தும் ரயில் தண்டவாளத்தை மறித்து கட்டைகள் மற்றும் மரக்கிளைகளை போட்டும் தமது எதிர்ப்பை வெளியிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, அக்காள்மடம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரச பேருந்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர்.

மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும் மீனவர்களுக்கான தண்டனைளைய ரத்து செய்யும்வரை ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேல்முறையீடு செய்யப்படும் என இராமேஸ்வரம் நாடாளுமன்ற உறுப்பினரால் வாக்குறுதி அளிக்கப்பட்ட பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி இந்தியாவிலிருந்து ட்ரோலர் படகு மூலம் நாட்டின் கடற்பரப்பிற்குள் ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டிலே தமிழக மீனவர்கள் உள்ளிட்ட எட்டு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்