மீரியபெந்த மண்சரிவு; கறுப்பு வெள்ளைக் கொடிகளை ஏற்றி மலையகத்தில் துக்கம் அனுஷ்டிப்பு

மீரியபெந்த மண்சரிவு; கறுப்பு வெள்ளைக் கொடிகளை ஏற்றி மலையகத்தில் துக்கம் அனுஷ்டிப்பு

மீரியபெந்த மண்சரிவு; கறுப்பு வெள்ளைக் கொடிகளை ஏற்றி மலையகத்தில் துக்கம் அனுஷ்டிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2014 | 3:55 pm

கொஸ்லாந்தை மீரியபெந்த மண் சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் துக்கத்தில் பங்கு கொள்ளும் விதமாக மலையகத்தின் அனைத்து தோட்டங்களின் மக்கள் கருப்பு மற்றும் வெள்ளை கொடிகளை பறக்கவிட்டு துக்கத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மலையக்கத்தில் சில தோடடங்களைச் சேர்ந்த மக்கள் இன்று தொழிலுக்கு செல்லவில்லை.

அட்டன் செனன் தோட்ட மக்கள் தொழிலுக்கு செல்லாமல், ஓர் இடத்தில் கூடி தமது துக்கத்தை பகிர்ந்து கொண்டதுடன் தமது ஒரு நாள் சம்பளத்தை மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்கும் இவர்கள் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் மலையக நகரங்களிலும் கருப்பு மற்றும் வெள்ளை கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதையும் காணக் கூடியதாக உள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்