மீனவர் பிரச்சினைக்கு இடைக்கால தீர்வினை வழங்குவதாக சுஷ்மா சுவராஜ் உறுதி

மீனவர் பிரச்சினைக்கு இடைக்கால தீர்வினை வழங்குவதாக சுஷ்மா சுவராஜ் உறுதி

மீனவர் பிரச்சினைக்கு இடைக்கால தீர்வினை வழங்குவதாக சுஷ்மா சுவராஜ் உறுதி

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2014 | 11:40 am

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இடைக்கால தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர் விடயத்தில் நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதுவரையில், தற்காலிக தீர்வு வழங்குவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கைப்பற்றப்பட்டுள்ள படகுகளை மீட்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்