மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜே. ஸ்ரீறங்கா விஜயம்

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜே. ஸ்ரீறங்கா விஜயம்

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2014 | 9:55 pm

கொஸ்லாந்தையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே. ஸ்ரீறங்கா இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மண்சரிவால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறியும் பொருட்டு இன்று அந்தப் பிரதேசங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீறங்கா சென்றிருந்தார்.

அங்கு மக்களுடன் அவர்  கலந்துரையாடியதுடன், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

மக்கள் எடுத்துரைக்கப்பட்ட குறைகள் மற்றும் கருத்துக்களை அங்கு பிரசன்னமாகியிருந்த பொலிஸ் மாஅதிபர் மற்றும் இராணுவப் பொறுப்பதிகாரிகளுக்கு  பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீறங்கா தெளிவுபடுத்தினார்.

இரண்டு பெக்கோ இயந்திரங்கள் மூலம் மாத்திரம் இந்த பாரிய மீட்புப் பணிகளை எவ்வாறு ​மேற்கொள்ள முடியும் என்ற  மக்களின் ஆதங்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் இராணுவத் தரப்பிற்கும் அரசியல்வாதிகளுக்கும் எடுத்துக் கூறினார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ மற்றும் உதித லொக்குபண்டார ஆகியோரை  பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அழைத்துச்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீறங்கா, மக்கள் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கும் துரித உதவிகளையும் விளக்கியுள்ளார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள்  இருவரையும் மக்களுடன் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளையும் ஜே.ஸ்ரீரங்கா செய்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அத்தியவசி அவசர உதவிகள் தொர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம் தெளிவுபடுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்