மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமெரிக்கா ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பு

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமெரிக்கா ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பு

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமெரிக்கா ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2014 | 7:59 pm

கொஸ்லாந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமெரிக்கா ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கும் அமெரிக்கா தனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மண்சரிவினால் தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்கள், அனர்த்தத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் இந்த இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பேரிழப்புகளையும், சேதங்களையும் அடையாளம் கண்டுவரும் நிலையில் அரசாங்கத்திற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவியளிப்பதற்கு அமெரிக்கா தயாராகவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்தினதும், படையினரதும் துரிதமான பிரதிபலிப்புகளையும், துணிவுடனான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளையும் அமெரிக்கா பாராட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்