மண்சரிவினால் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான காணிகளை உடன் வழங்கவும்-ஜனாதிபதி

மண்சரிவினால் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான காணிகளை உடன் வழங்கவும்-ஜனாதிபதி

மண்சரிவினால் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான காணிகளை உடன் வழங்கவும்-ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2014 | 8:26 pm

மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மீளக் குடியமர்த்துவதற்குத் தேவையான காணிகளை உடனடியாக பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

கொஸ்லாந்தை, மீரியபெத்த மண்சரிவின் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதற்குத் தேவையான காணிகளை உடனடியாக பெற்றுக்கொடுக்குமாறு, ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மண்சரிவுக்குள்ளான பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக மீரியபெத்த பகுதிக்கு இன்று முற்பகல் விஜயம் செய்திருந்தபோதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

குறிப்பாக பெற்றோரை இழந்த பிள்ளைகளின் பாதுகாப்பை முன்னிட்டு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அநாதரவான பிள்ளைகளின் உரிமைகோரி பல்வேறு மோசடிப் பேர்வழிகள் முன்வரலாம் என்பதால், அதுகுறித்து விசேட கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அநாதரவான பிள்ளைகளை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுதல் அல்லது நிரந்தர திட்டமொன்றை ஆரம்பிக்கும் வரை பொது இடமொன்றில் அவர்களைப் பராமறிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுதவிர மண்சரிவு அபாயம் நிலவுகின்ற பிரதேசங்களில் இருந்து மக்களை இடமாற்றுவதற்கான ஆலோசனைகளை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு  வழங்குவதுடன், அந்த ஆலோசனைகளை பிற்பற்றுவது தோட்ட உரிமையாளர்களின் பொறுப்பாகவுள்ளது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கவனயீனமாக செயற்பட்டு அப்பாவி மக்களின் உயிர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்