பெற்றோரை இழந்த 75 பிள்ளைகளை அரசு பொறுப்பு ஏற்பதாக தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

பெற்றோரை இழந்த 75 பிள்ளைகளை அரசு பொறுப்பு ஏற்பதாக தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2014 | 9:33 pm

கொஸ்லந்த மண் சரிவு குறித்து ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர்  தினேஸ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பை விடுத்தார்.

ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்த கருத்து:-

“இந்த அனர்த்தத்தினால் 6 லைன் குடியிருப்புகளில் இருந்த 63 வீடுகள், 57 குடும்பங்களை சேர்ந்த 330 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொது நோக்கு மண்டபம், பால் சேகரிக்கும் 2 நிலையங்கள், கோவில், இரண்டு வர்த்தக நிலையங்கள், தொலைத்தொடர்பு நிலையம் மற்றும் தோட்ட அதிகாரிகளின் 3 வீடுகள் என்பன முழு அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 75 பிள்ளைகள் பாடசாலைக்கு சென்றிருந்ததுடன் 100 பேர் வரை தொழில் நிமித்தம் வெளியில் சென்றிருந்தமையினால் அவர்கள் அனர்த்தத்தில் சிக்கவில்லை. அனர்த்தத்தில் பெற்றோர்களை இழந்த 75 குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்து அரசாங்கம் பொறுப்பேற்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ”

எதிர்கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க தெரிவித்த கருத்து:-

“எதிர்கட்சி என்ற வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றோம். மண் சரிவு குறித்து ஏற்கனவே தெரிந்திருந்தமையை இங்கிருக்கும் கவலையான விடயமாகும். ஆகவே தற்போது எதை கொடுத்தும் பலனில்லை. உயிர்கள் அழிந்து விட்டன.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்