நுவரெலியாவில் மண்சரிவு அபாயம்; 1200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

நுவரெலியாவில் மண்சரிவு அபாயம்; 1200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

நுவரெலியாவில் மண்சரிவு அபாயம்; 1200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2014 | 12:20 pm

நுவரெலியாவில் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதியிலுள்ள 300ற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 1,200 பேரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலாளர் பிரிவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜி.குமாரசிறி தெரிவிக்கின்றார்.

நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரையில் 104 குடும்பங்களை சேர்ந்தவர்களை அவர்களின் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் லிப்பகல தோட்டத்திலிருந்து 150 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் கூறினார்.

இதேவேளை, கொத்மலை வெவண்டன் தோட்டத்தில் 17 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், 50 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் டீ.பீ.ஜி.குமாரசிறி தெரிவிக்கின்றார்.

மண்சரிவு அபாயத்தினால் வலப்பனை லிடெஸ்டெல் தோட்டத்தில் 17 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலையால் உயிர்ச் சேதங்களை ஏற்படாது பாதுகாப்பதற்கு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்