நியாயமான அரசியல் தீர்வொன்றை தாம் எதிர்பார்ப்பதாக த.தே.கூ தெரிவிப்பு

நியாயமான அரசியல் தீர்வொன்றை தாம் எதிர்பார்ப்பதாக த.தே.கூ தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2014 | 9:00 pm

நியாயமான அரசியல் தீர்வொன்றை தாம் எதிர்பார்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தது.

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற குழுத் தலைவர்-ஆர். சம்பந்தன் தெரிவித்த கருத்து-

“இணக்கப்பாட்டின் ஊடாக தேசிய பிரச்சினைக்கு இறுதித் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு நாம் அர்பணிப்புடன் செயற்படுகின்றோம்.  ஒன்றிணைந்த மற்றும் பிளவுபடாத இலங்கை என்ற வரையறையில் அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்பு செய்கின்றோம்.  அது கௌரமான மற்றும் நியாயமான தீர்வாக இருக்க வேண்டும்.  அத்துடன் செயற்படுத்த முடியுமான தீர்வாகவும் அது அமைய வேண்டும். எனினும் நாம் இந்த வேளையில் கவலையுடன் ஒரு விடயத்தைக் கூற வேண்டும்.  நாம் எமது நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ள போதிலும் பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் அரசாங்கம் எமது யோசனைகளுக்கு பொறுப்புடன் பதில் வழங்குவதில்லை.”

விஜித ஹேரத் தெரிவித்த கருத்து-

“ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு 103 கோடி ரூபாவாக இருக்கின்ற போதிலும் விவசாயத்துறைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 236 கோடி ரூபாவை நீக்கியுள்ளனர்.  பாராளுமன்றத்தில் எமது சபை முதல்வருக்கான நிதியில் இருந்து ஒரு மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளனர்.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்