கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவில் 100ற்கும் குறைவானவர்களே சிக்கியிருக்கலாம்? – மஹிந்த அமரவீர

கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவில் 100ற்கும் குறைவானவர்களே சிக்கியிருக்கலாம்? – மஹிந்த அமரவீர

கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவில் 100ற்கும் குறைவானவர்களே சிக்கியிருக்கலாம்? – மஹிந்த அமரவீர

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2014 | 7:50 am

கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் மண்சரிவில் புதையுண்டு காணாமல் போனோரை மீட்பதற்கான பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த பகுதியில் மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் நீடிக்கின்றபோதிலும், மீட்பு பணிகளை மீள ஆரம்பிப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிடுகின்றார்.

அந்த பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்த நிலையில், இருள் சூழ்ந்ததால் ஏற்பட்ட சிரமம் காரணமாக மீட்புப் பணிகள் நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

மண்சரிவில் சிக்குண்டவர்கள் தொடர்பில் சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் கூறினார்.

வெளி பகுதிகளுக்கு தொழில்நிமிர்த்தம் சென்றிருந்தவர்கள், நேற்று நள்ளிரவு வரையில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தமையே இதற்குக் காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நூறுக்கும் குறைந்தளவிலானவர்களே அனர்த்தத்தில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், வீடுகள் அனைத்தும் முற்றாக அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் காணப்படுவதால், மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இரண்டு தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான நிவாரணங்கள் வழங்கப்பட்டுவருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ஆறு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

உயிரிழந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மீட்புப் பணிகளில் 500 அதிகமான இராணுவத்தினர் நேற்று ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேவையேற்படும் பட்சத்தில் மேலதிக இராணுவத்தினரை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இராணுவ ஊடகப் பணி்பாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டார்.

சுமார் 200 அடி தாழ்நிலப் பகுதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்