‘என்னை அறிந்தால்’ அஜித் படத்தின் தலைப்பு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

‘என்னை அறிந்தால்’ அஜித் படத்தின் தலைப்பு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

‘என்னை அறிந்தால்’ அஜித் படத்தின் தலைப்பு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2014 | 8:46 am

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல55 படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. ‘என்னை அறிந்தால்’ என்ற தலைப்பினை உத்தியோகபூர்வமாக நேற்று படக்குழு அறிவித்துள்ளது.

பொதுவாகவே கௌதம் மேனன் இறுதிக் கட்ட காட்சிகளை தான் எடுக்க தாமதிப்பார் என்று குறிப்பிடுவார்கள், ஆனால் அஜித் பட விடயத்தில் தலைப்பு அறிவிக்கவே பல நாட்கள் இழுத்தடித்தார். இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்த கையோடு தலைப்பை அறிவித்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கிய படங்களின் பெயர்களும் இப்படி தூய தமிழில் தான் இருக்கும், அந்த வகையில், நடுநசி நாய்கள், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என்பன குறிப்பிடத்தக்கது.

என்னை அறிந்தால் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்