இ.போ.ச பஸ் மீது கிளிநொச்சியில் கல்வீச்சு

இ.போ.ச பஸ் மீது கிளிநொச்சியில் கல்வீச்சு

இ.போ.ச பஸ் மீது கிளிநொச்சியில் கல்வீச்சு

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2014 | 9:13 am

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் மீது கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் அடையாளம் தெரியாதோரால் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன் வந்துகொண்டிருந்த பஸ் மீதே கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆயினும் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

கல்வீச்சுக்கு இலக்கான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், கிளிநொச்சி பொலிஸாரின் பொறுப்பில் உள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்