5 ஆண்டுகளுக்குப் பின் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த தென் ஆபிரிக்கா

5 ஆண்டுகளுக்குப் பின் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த தென் ஆபிரிக்கா

5 ஆண்டுகளுக்குப் பின் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த தென் ஆபிரிக்கா

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2014 | 10:08 am

ஒருநாள் போட்டிகளுக்கான தர வரிசையில் தென் ஆபிரிக்க அணி முதலிடம் பிடித்துள்ளது. 2009ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த இடத்துக்கு தென் ஆபிரிக்க வந்து அசத்தியுள்ளது.

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் 115 புள்ளிகளுடன் தென் ஆபிரிக்கா முதலிடத்திலும், 114 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், ஒரு புள்ளிகள் குறைவாக அதாவது 113 புள்ளிகளுடன் இந்திய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

நவம்பரில் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ள இலங்கை 111 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், 107 புள்ளிகளுடன் இங்கிலாந்து ஐந்தாம் இடத்திலும், 98 புள்ளிகள், 96 புள்ளிகளுடன் முறையே பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகியவை ஆறு மற்றும் ஏழாம் இடங்களிலும் உள்ளன. மேற்கிந்தியதீவுகளும் 96 புள்ளிகள் எடுத்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதற்கு பரிசாக தென் ஆபிரிக்காவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. முன்னதாக சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மோசமாக தோற்றதால் 2009ல் தென் ஆபிரிக்க அணி முதலிடத்தை இழந்திருந்தது.

ஐந்தாண்டுகளுக்கு பிறகு ஐசிசி தரவரிசையில் தென் ஆபிரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்