மீரியபெத்த  பகுதியில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும்; ஜனாதிபதி பணிப்புரை

மீரியபெத்த பகுதியில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும்; ஜனாதிபதி பணிப்புரை

மீரியபெத்த பகுதியில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும்; ஜனாதிபதி பணிப்புரை

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2014 | 3:36 pm

பதுளை, கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் இடம்பெற்றுள்ள அனர்த்த நிலைமை குறித்து உடனடியாக ஆராய்ந்து, மண்சரிவில் சிக்குண்டவர்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர், ஊவா மாகாண முதலமைச்சர் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ஆகியோருக்கு தொலைபேசி ஊடாக ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

திருகோணமலையில் இருந்து ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் 500க்கும் அதிகமான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய பிராந்தியத்திற்குப் பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா கூறியுள்ளார்.

இன்று காலை ஏற்பட்ட இந்த மணிசரிவில் சிக்கி 300 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதுடன், இதுவரை 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்