விரைவில் யன்னல் இல்லாத “தொடு திரை” விமானங்கள் – பிரிட்டன் திட்டம்

விரைவில் யன்னல் இல்லாத “தொடு திரை” விமானங்கள் – பிரிட்டன் திட்டம்

விரைவில் யன்னல் இல்லாத “தொடு திரை” விமானங்கள் – பிரிட்டன் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2014 | 9:39 am

உலகிலேயே முதன்முறையாக யன்னல் இல்லாத தொடு திரை விமானம் விரைவில் உபயோகத்திற்கு வரவுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் வடிவமைத்துள்ள இந்த தொழில்நுட்பம் வாயிலாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் முழுமையாக வெளியில் உள்ளவற்றை பார்க்கலாம்.

29-1414553391-flight-touch-screen34-699

வானத்தை தொடர்ச்சியாக பார்க்கக்கூடிய வகையில் வழக்கமான யன்னல்களுக்கு பதிலாக முழு நீள தொடுதிரைகள் பொருத்தப்படுகிறது.

விமானத்திற்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள புகைப்படக்கருவி மூலமாக மிகத் தெளிவாக விரும்பிய கோணங்களில் பார்க்க முடியும்.

மேலும், பயணிகள் தாங்களாகவே திரையின் ஒளி அளவை மாற்றிக் கொள்ள முடியும்.

29-1414553224-touch-screen-flight24-600

தற்போதுள்ள கண்ணாடி யன்னல் திரைக்கு கடினமான பொருட்கள் தேவைப்படுகின்றன. ஏனெனில், 35 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்போது ஏற்படும் காற்றின் அழுத்தத்தால் கண்ணாடி உடையாமல் இருக்க வேண்டும். ஆனால், புதிய தொடு திரை தொழில்நுட்பத்தில் அப்படி எதுவும் தேவையில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்