மீரியாபெத்த பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு; 7 தோட்ட குடியிருப்புக்கள் மண்ணில் புதையுண்டுள்ளன

மீரியாபெத்த பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு; 7 தோட்ட குடியிருப்புக்கள் மண்ணில் புதையுண்டுள்ளன

மீரியாபெத்த பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு; 7 தோட்ட குடியிருப்புக்கள் மண்ணில் புதையுண்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2014 | 9:24 am

பண்டாரவளை, கொஸ்லாந்த மீரியாபெத்த பகுதி தொடர்ந்தும் மண்சரிவுக்குள்ளாகி வருகின்றது.

தற்போது 1 கிலோமீற்றர் பகுதி மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளதுடன் 7 தோட்ட குடியிருப்புகள் மண்ணில் புதையுண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட செயலாளரின் பணிப்புரைக்கு அமைய இராணுவம் மற்றும் பொலிஸார் ஆகியோருடன் இணைந்து குறித்த பகுதியில மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார கூறுகின்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்