பதுளை மாவட்டத்தின் பல வீதிகளில் மண்சரிவு அபாயம்

பதுளை மாவட்டத்தின் பல வீதிகளில் மண்சரிவு அபாயம்

பதுளை மாவட்டத்தின் பல வீதிகளில் மண்சரிவு அபாயம்

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2014 | 7:15 pm

பலத்த மழையின் காரணமாக பதுளை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை, எல்ல, பசறை,     ஊவா-பரணகம, ஹல்துமுல்ல, ஹப்புத்தலை மற்றும் ஹாலிஎல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எல்ல – வெல்லவாய, ஹபுத்தளை – பெரகல, பெரகல – வெல்லவாய, பதுளை – ஸ்பிரிங்வெலி ஆகிய வீதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்திளை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்